உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்ப் இல்லத்திற்குள் ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்த இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
52 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர் மீது சட்ட அமுலாக்க அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ட்ரம்ப்பின் மார்-அ-லாகோ இல்லத்துக்குள், நேற்று நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞனொருவா் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அவரைக் கண்ட சட்ட அமுலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவர், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து தங்களை தற்காத்துக்கொள்ளும் நோக்கில், அந்த இளைஞர் மீது அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஆஸ்டின் டக்கர் மார்டின் (21) என்று தெரியவந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எதற்காக அவர் ட்ரம்ப்பின் இல்லத்துக்குள் நுழைந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0