உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் கொ*லை – மெக்சிகோவில் கலவரம்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
62 பார்வைகள்

மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் நபரான ‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் நெமேசியோ ஒஸ்குவேரா செர்வான்டெஸ் (எல் மெஞ்சோ), இராணுவத்தின் விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

15 மில்லியன் டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த, எல் மெஞ்சோ கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.ஜலிஸ்கோ மாநிலத்தின் மத்திய-மேற்குப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கபப்டுகின்றது.

எனினும் இந்த தகவலை , மெக்சிகோ அரசாங்கம் இதனை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.சம்பவத்தை தொடர்ந்து ஜலிஸ்கோ உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய நபர்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.ஜலிஸ்கோவை மையமாகக் கொண்ட இந்த போதைப்பொருள் கும்பல் தற்போது மெக்சிகோ நாடு முழுவதும் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

72 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

88 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

23 0 0