உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிறையில் அடைத்தாலும் நாமல் வெற்றியடைவார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது நாமல் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற புதிய சரித்திரச் சாதனையை அவர் படைப்பார்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டுக் கட்சி) உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“தற்போது மக்கள் ஆதரவு மீண்டும் எமது பக்கம் திரும்புவதைக் கண்டு அஞ்சும் தரப்பினர், நாமல் ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே அவருக்கு எதிராகச் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

எந்தச் சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாமல் ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும், நாம் வெளியில் இருந்து அவருக்காகத் தீவிரமாகச் செயற்படுவோம். ஒருவேளை ஜனாதிபதித் தேர்தல் நடக்கும்போது அவர் சிறையில் இருந்தாலும், மக்கள் ஆதரவுடன் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். இதன் மூலம் சிறையில் இருந்து ஜனாதிபதித் தேர்தலை வென்றவர் என்ற பெருமையை அவர் வரலாற்றில் பதிவு செய்வார்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

50 0 0