உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

விசாரணைக்கு வருவதற்கு ரணிலின் மனைவி மறுப்பு; உடல்நிலையைக் காரணம் காட்டி சி.ஐ.டிக்கு கடிதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராக முடியாது என அறிவித்துள்ளார்.

தன்னுடைய உடல்நலக் குறைவு காரணமாக இன்று அந்தப் பிரிவில் முன்னிலையாக முடியாது என்பதை அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் சிஐடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தான் தற்போது உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாகத் தன்னிடம் வாக்குமூலம் பெறப்பட வேண்டுமெனில், அதனைத் தனது இல்லத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட பிரிட்டனுக்கான தனிப்பட்ட பயணத்துக்காக, 1.66 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இந்தநிலையிலேயே, இன்று முன்னிலையாக வேண்டிய பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, தனது இயலாமையை மருத்துவக் காரணங்களைக் காட்டித் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

50 0 0