உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

புதுடில்லியில் இலங்கை – பிரேசில் ஜனாதிபதிகளிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்தியாவின் புதுடில்லியில் தற்போது நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, இந்த முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் பிரேசில் நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குவது குறித்தும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் இரு நாடுகளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இணக்கம் தெரிவித்துள்ளன.

உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டுள்ள இந்த உச்சிமாநாட்டின் இடையே, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏனைய நாடுகளின் தலைவர்களுடனும் சிநேகபூர்வ சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு.!

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது…

2 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கு பிற மாவட்டங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்து வரப்படும் நபர்கள்.!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்காகப் பிற மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் சுமார் 400 பேர் அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட…

53 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

48 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

56 0 0