உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எவரையும் கைவிடாத செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் – புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லியில் நடைபெற்று வரும் ‘AI Impact 2026’ மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் நெறிமுறைகள் மற்றும் மனிதக் கவனத்துடன் முன்னெடுக்கப்படுவதை இலங்கை உறுதிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.


இந்த ஆரம்ப நிகழ்வில் நரேந்திர மோடி, இம்மானுவேல் மக்ரோன், லூலா டி சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஜனாதிபதி, AI தொழில்நுட்பம் இலங்கை தனித்து மட்டுமல்ல, பிராந்திய பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பு மூலம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, மையப்படுத்தப்பட்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள், பாதுகாப்புக் கருவிகள் மற்றும் கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய நான்கு அடிப்படை விடயங்களை முன்மொழிந்தார்.

அவரது கருத்துப்படி, AI தொழில்நுட்பம் சில மொழிகள் மற்றும் கலாசாரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், இலங்கையின் தனித்துவமான கலாசார பன்முகத்தன்மை இழக்கப்படும் அபாயம் உள்ளது. அதற்காக உள்ளூர் மொழிகளை டிஜிட்டல் மயப்படுத்தி AI கட்டமைப்பில் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.


மேலும், இலங்கையில் தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், டேட்டா பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்புக்கான சட்ட கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும், இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான பிராந்திய AI தரவு மையங்களை உருவாக்க இலங்கை தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0