உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்வர்கள் மீது வழக்கு தொடரப்படும் – பொலிஸார் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் F.U. வுட்லர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கையில் வாகன ஓட்டும்போது ஏற்பட்ட வீதி விபத்துகளில் மொத்தம் 5 வெளிநாட்டினர் உயிரிழந்தனர்.

மேலும் 7 கடுமையான விபத்துகள் மற்றும் 78 சுற்றுலாப் பயணிகள் சிறிய காயங்களுக்கு உள்ளானனர் என அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகளில், வாகன சாரதிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இருவரும் மோட்டார் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வெளிநாட்டினர் மீது வழக்கு தொடரப்படும்.மேலும், ஒரு மோட்டார் வாகனம், மோட்டார் சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் வாடகைக்கு விட வேண்டும் என்றால், வெளிநாட்டு நபர் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரம், இலங்கையில் வசிக்கும் வெளிநாட்வாசிக்கு வழங்கப்படும் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம், அல்லது மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.


இந்த மாற்றுச் சான்றிதழ் வேரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திலும், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சிறப்பு கருமபீடங்களிலும் வழங்கப்படும் என்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு.!

களனி ஆற்றிலிருந்து நீரைப் பெறும் நீர் உட்புகும் நிலைய (Intake) பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் நிலைமையினால் நீரின் தரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

46 0 0
இலங்கை செய்திகள்

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்.!

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2…

54 0 0
இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

47 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

56 0 0