உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கணேமுல்ல சஞ்சீவ கொ*லை; கைதான சட்டத்தரணியின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் வெளிவந்த விடயம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
47 பார்வைகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி கடவத்தை பகுதியில் எட்டு வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்றைய தினம் (19.02.2026) நீதிமன்றில் சாட்சியங்களை முன்வைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான சட்டத்தரணி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து தயாரிக்கப்பட்ட கணக்குகள் மூலம் பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை கருத்தில் கொண்ட நீதவான், கேள்விக்குரிய எட்டு வங்கிக் கணக்குகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள மற்ற மூன்று சந்தேகநபர்களையும் அடுத்த மாதம் 5ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் மகேஷ் ஒபேசேகரவின் வசம் இருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது.

இந்த வழக்கை அடுத்த மாதம் 5ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

38 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

48 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

49 0 0