உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கை கடற்படையால் படு கொ*லை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கை கடற்படையால் படு கொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது நேற்று(18) மாலை 04.00 மணியளவில் ஆரம்பமாகியது.

சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (1994.02.18) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஸ்ரீலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முதல் நிகழ்வாக படுகொலையை நினைவுகூரும் விதமாக அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மலர் மாலையினை உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் அணிவிக்க பொதுச் சுடரும் உயிரிழந்த மீனவர் ஒருவரின் தந்தையால் ஏற்றப்பட ஏனைய சுடர்களை சம நேரத்தில் உறவுகள் ஏற்றிவைத்தனர்.

அத்துடன் மலர் அஞ்சலியை வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் ஆரம்பித்துவைக்க அதனை தொடர்ந்து விருந்தினர்கள், உறவினர்கள், பொது மக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது.

இந்நிகழ்வில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன், அருட்கலாநிதி ரமேஷ் அடிகளார், அருட்சகோதரன் ஜெனிஸ்ரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ், காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் காண்டிபன், சண்டிலிப்பாய் பிரதேச சபை உப தவிசாளர் தயாபரன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வசந்தன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0