உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி; குற்றவாளிகளுக்கு அரசு பச்சைக்கொடி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசு, தனது அரசியல் இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவிடுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது,
“அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டத்தரணி தம்பதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியைப் பாரிய கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் அல்ல என்றும், இது ஒரு தனிப்பட்ட ரீதியிலான சம்பவம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது வேடிக்கையாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.

அமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற கருத்துக்கள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருக்கு அரசு வழங்கும் ஒரு ‘பச்சைக்கொடி’ போன்றதாகும்.

பட்டப்பகலில் மக்கள் நடமாடும் வீதிகளில் அரங்கேற்றப்படும் கொலைகளை, ‘இயற்கையான நிகழ்வுகள்’ எனக்கூறி நியாயப்படுத்த அரசு முயல்கின்றதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகின்றோம்.” – என்றார்.

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை சுட்டிக்காட்டிய அவர், நடப்பு ஆண்டின் கடந்த சில நாட்களில் மாத்திரம் சுமார் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் வெளியிட்டார். இவ்வாறான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ள அரசு, மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0