உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

அரசியல் நாடகங்களால் அநுர அரசு தடம் புரளாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் எத்தனை தடவை ஒன்றுகூடினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் தூய்மையான அரசியல் பயணத்தை அவர்களால் தடுக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் குரல் அமைப்புக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நேற்று பத்தரமுல்லையிலுள்ள ‘நெலும் மாவத்தை’ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் வெவ்வேறு கொள்கைகளுக்காகப் பிரிந்து சென்றவர்கள், தற்போது தேர்தலை இலக்கு வைத்து மீண்டும் ஒன்றிணைவது மக்கள் நலனுக்காக அல்ல, மாறாகத் தங்களின் அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே.

நேற்று வரை ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருந்தவர்கள், இன்று ஒரே மேசையில் அமர்ந்திருப்பது கொள்கைக்காக அல்ல. மாறாக, தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுத்து வரும் ஊழலுக்கு எதிரான விசாரணைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவே இந்த அவசரக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் இவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய தெளிவான ஆணையைச் சிதைக்க இவ்வாறான ‘நெலும் மாவத்தை’ சந்திப்புகள் முயற்சிக்கின்றன. ஆனால், பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் எத்தனை தடவை ஒன்று கூடினாலும், தற்போதைய அரசின் தூய்மையான அரசியல் பயணத்தை அவர்களால் தடுக்க முடியாது.

பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்றவர்கள் ஒருபுறம் சஜித் பிரேமதாஸவைச் சந்திக்கின்றார்கள், மறுபுறம் ராஜபக்ஷக்களின் தலைமையகத்துக்குச் செல்கின்றார்கள். இவர்களுக்கு நிலையான கொள்கை கிடையாது. இவர்களின் நோக்கம் மீண்டும் அதிகாரத்தைப் பெற்று, தங்களின் பழைய சலுகைகளைப் பாதுகாப்பதே தவிர, மக்களின் குரலாக ஒலிப்பதல்ல.

இவ்வாறான அரசியல் நாடகங்களால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தடம்புரளாது. திருடப்பட்ட மக்கள் சொத்துக்களை மீட்கும் பணியும், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் எவ்விதத் தடையுமின்றித் தொடரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0