உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

போதைப்பொருளுக்கு அடிமையான மகனை கொ*லை செய்த தந்தை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

வீட்டின் பொருட்களைத் திருடி விற்று போதைப்பொருள் பாவித்த மகனை, தந்தை வாளால் வெட்டிப் படு கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை அம்பாந்தோட்டை, வலஸ்முல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய 45 வயதுடைய தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நீண்டகாலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி இருந்தார் எனவும், இதற்காக வீட்டிலுள்ள பெறுமதிமிக்க பொருட்களைத் திருடி விற்று வந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை, வீட்டின் பொருளொன்றைத் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்ற மகனை, தந்தை கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

மகன் பிடிபட்டதையடுத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது மதுபோதையில் இருந்த தந்தை, ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த வாளால் மகனின் தலையில் பலமாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள தந்தையிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்திய பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பியோடிய இலங்கைப் படகு.!

இந்தியாவின் கோட்டைப்பட்டினம் அருகே கரையில் இருந்து இரண்டு கடல்மைல் (நொட்டிக்கல்) தூரத்தில் இலங்கை மீன்பிடிப் படகொன்று நீண்ட நேரம் நடமாடியதால் அப்பகுதியில் நேற்றுக் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

41 0 0
இலங்கை செய்திகள்

நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்லர் – மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையே எதிர்த்தோம்.!

“தமிழ் மக்களுக்கான அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்லர், மாறானவர்களும் நாங்கள் அல்லர். ஆனால், தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்…

53 0 0
இலங்கை செய்திகள்

எல்நினோ காலநிலையால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக…

63 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

100 0 0