பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிப்பு!
அம்பத்தளையில் இருந்து தெஹிவளை வரை நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட அவசரக் கோளாறு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. நாளை (19) காலை 6:00 மணிக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.