உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; ஒபாமா பதிலடி.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
59 பார்வைகள்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா முகங்களை குரங்குகளுடன் இணைத்து காட்டும், இனவெறியைத் தூண்டும் வகையிலான காணொளி, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன, பின்னணியில் “The Lion Sleeps Tonight” பாடல் ஒலித்தது.

இந்த காணொளிக்கு ஜனநாயகக் கட்சியினரின் மட்டுமின்றி, குடியரசுக் கட்சியினர் கூட கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் செனட்டர் டிம் ஸ்காட் இதை ‘இந்த வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல்’ என விமர்சித்தார். வெள்ளை மாளிகை ஆரம்பத்தில் இதனை சாதாரண மீம் என்று கூறியிருந்தாலும், எதிர்ப்பின் பின்னர் பதிவை நீக்கியது மற்றும் ஊழியரின் தவறான பகிர்வாக விளக்கமளித்தது.

பிரையன் டெய்லர் கோஹன் பொட்காஸ்டில் பேசிய பராக் ஒபாமா, ட்ரம்ப் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமலேயே, “பொது வாழ்வில் இருக்க வேண்டிய வெட்கம் மற்றும் கண்ணியம் தற்போது தொலைந்து விட்டது. சமூக ஊடகங்களில் கோமாளிக்கூத்து நடக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் நேர்மை மற்றும் இரக்கத்தில் நம்பிக்கை வைத்துள்ளனர்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.இதற்கிடையில், சிக்காகோவில் அமைக்கப்பட்டு வரும் ஒபாமா ஜனாதிபதி நூலகம் வரும் ஜூன் 2026-ல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0