உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இம்ரான் கான் உடல்நிலை தீவிரம்: சிறப்பு மருத்துவக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
43 பார்வைகள்

ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பாக கவலைக்கிடமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அவரை புதிய சிறைக்கு மாற்றுவதற்கு பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளது.


2023 ஆம் ஆண்டில் இருந்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு வலது கண்ணில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ரத்த உறைவு காரணமாக அவரது வலது கண்ணில் 15 சதவீத பார்வை மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், சிறை அதிகாரிகள் உரிய சிகிச்சை வழங்காத அலட்சியத்தால் 85 சதவீத பார்வை இழந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இம்ரான் கானின் உடல்நிலையை ஆய்வு செய்ய சிறப்பு மருத்துவக் குழுவொன்றை அமைக்க அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், இம்ரான் கான் விரைவில் இஸ்லாமாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் புதிய சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் என தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

“இஸ்லாமாபாத்தில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய சிறைச்சாலை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் நிறைவடைந்ததும், இம்ரான் கான் அங்கு மாற்றப்படுவார். தலைநகர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவராக இருப்பதால், அவர் தலைநகர் சிறையிலேயே வைக்கப்படுவார்” என்றார்.


இதேவேளை, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அவரது கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “இம்ரான் கானை உடனடியாக அல்-ஷிபா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்; அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0