உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இந்தியா – சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்.!

உலக செய்திகள் 7 மாதங்கள் முன்
57 பார்வைகள்

சவுதி அரேபியாவும் இந்தியாவும் ஆயுதப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் செயல்திறன் வாய்ந்த ஈடுபாட்டையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளன.இது தொடர்பில், இந்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சஞ்சய் சேத், சவுதி அரேபியாவின் நிர்வாக விவகாரங்களுக்கான பாதுகாப்பு உதவி அமைச்சர் கலீத் பின் ஹுசைன் அல்-பியாரியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். நடைபெற்ற “உலக பாதுகாப்பு கண்காட்சி” நிகழ்வில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டிருந்த அமைச்சர் சஞ்சய் சேத், இச்சந்திப்பை மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், பாதுகாப்பு மேம்பாட்டுக்கான சவுதி அரேபிய பொது அதிகார சபையின் ஆளுநர் ஃபலே பின் அப்துல்லா அல்-சுலைமான்யையும் அவர் சந்தித்து, பாதுகாப்பு துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.ரியாத்தில் நடைபெற்ற உலக பாதுகாப்பு கண்காட்சியில், இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவனங்களும் தயாரிக்கும் நவீன ஆயுத அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவற்றின் தொழில்நுட்ப திறன்கள் சர்வதேச அளவில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இச்சந்திப்பு, இந்தியா–சவுதி அரேபியா பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

25 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

22 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

46 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

42 0 0