உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.

தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன் அவர்கள் ஜீவன் தொண்டமான் எம்.பி அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள், நயினார் நாகேந்திரன் அவர்களை பொன்னாடையுடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது அழைப்பை ஏற்று, திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துக்கொள்ள வருகைத் தந்த நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, ஜீவன் தொண்டமான் அவர்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

77 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

70 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

31 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

63 0 0