சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு; மூவர் கைது.!
நாட்டில் பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது மூவர் கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளம் – அட்டவில்லுவ பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரிடமிருந்து 1072 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதுடன், அவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை,அத்தனகல்ல – மகுலுவெல்ல பகுதியில், சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் உராபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து 1260 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்தனகல்ல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேநேரம், மொரகஹஹேன – கொடிகமுவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 1512 கோடா லீற்றர் கைப்பற்றப்பட்டுள்ளது.
மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.