உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இனவாதம், அடிப்படைவாதம் தலைதூக்க இடமளியோம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

“இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின விழா, சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

சுதந்திர தின உரையின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

எல்லா வளங்கள் இருந்தாலும் மனித வளம் மிக முக்கியம். எனவே, அறிவு, ஆற்றல் மற்றும் தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் மனித வளத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

எமது கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராகி வருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

ஒற்றுமையிலேயே மனித வளத்தின் வெற்றி தங்கியுள்ளது. நாம் பிளவுபட்டு நின்றால் ஒற்றுமையின் பலம் தெரியவராது.

இலங்கையில் இரு மொழிகள் உள்ளன. அடையாளம் மற்றும் கலாச்சார உரிமைகள் உள்ளன. எனவே, ஒவ்வொரு இன குழுமங்களினதும் அடையாளம், உரிமைகள் ஏற்கப்பட வேண்டும்.

இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் மூலம் அழிவே ஏற்படுகின்றது. எனவே, இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்துக்கு நாம் இடமளிக்கமாட்டோம். தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்.” – என்றார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் : பிரதான வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22ற்குத் திகதியிடப்பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்…

73 0 0
இலங்கை செய்திகள்

போ@தைப்பொருள், மற்றும் மணல் மாபியாக்களைத் தடுப்பதில் வடக்கு மாகாண பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களைத் தடுப்பதில்வடக்கு மாகாணப் பொலிஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண…

65 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

27 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

60 0 0