மஸ்கெலியாவில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு.!
மஸ்கெலியாவில் இன்று 78 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
இன்று பெப்ரவரி மாதம் நான்காம் திகதி காலை ஒன்பது மணிக்கு முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தேசிய கொடியை ஏற்றினார்.
நிகழ்விற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், பணிபுரியும் அதிகாரிகள், அதன் செயலாளர் மற்றும் சிறுவர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

