உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களில் 3 படகுகளின் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதி்க்கப்பட்டுள்ளதுடன் இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவர்களுடன் கைதான மேலும் 9 பேரில் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி கைதான மூவரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 7 பேருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனையும் இன்று யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானால் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதியும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதியும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான கடற்றொழிலாளர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் ஜனவரி 20 ஆம் திகதி கைதான 7 கடற்றொழிலாளர்களின் விளக்கமறியலை இம்மாதம் 17 ஆம் திகதிவரை நீடித்தும், ஜனவரி 2 ஆம் திகதி கைதான 11 கடற்றொழிலாளர்களின் விளக்கமறியலை இம்மாதம் 13 ஆம் திகதி வரை நீடித்தும் நீதவான் உத்தரவிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்படும் சம்பவங்கள் இனிவரும் சந்ததிகளுக்கு மீள் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும்!

எங்களுடைய உறவுகள் இன்றைக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நிற்கிறோம் என்று சொன்னால், இனிவரும் சந்ததிகளுக்கு அது இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டும், மீள் நிகழாமையை உறுதிப்படுத்தவேதான்…

10 0 0
இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0