கரிநாள் போராட்டத்துக்கு சகலரும் ஆதரவு வழங்குக.!
“தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளை ‘கரிநாள்’ என அனுஷ்டிக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் மிகவும் பெறுமதியானது. இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்று காலை, அவர் தமது யாழ். இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களாகிய தமிழர்கள். இந்த நாட்டில் சமஷ்டி முறையில், நிம்மதியான வாழ்க்கை வாழ்வது நமது உரிமை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் இன்று 7 ஆண்டுகள் கடந்தும் தீர்க்கப்படவில்லை.
அதனால், இலங்கையின் சுதந்திர தினம் என்ற நாளில் ‘கரிநாள்’ என அனுஷ்டிக்கப்படவுள்ள போராட்டத்திற்கு, வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும்.” – என்றார்.