உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

தொற்றா நோய்க்கான குருதிப் பரிசோதனை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தொற்றா நோய்க்கான குருதிப் பரிசோதனை நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பரின் அனுமதியுடன், டாக்டர் எம்.எச்.றிஸ்பினின் வழிநடாத்தலில் நடைபெற்ற இந்த பரிசோதனை நிகழ்வில் BMI, சுகர், கொலஸ்ரோல், கிட்னி மற்றும் கண் பரிசோதனை என்பன ஒழுங்கு செய்யப்பட்டு நாடத்தப்பட்டது.

அத்துடன் பாலியல் நோய் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

டாக்டர் எம்.எச்.றிஸ்பின் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் டாக்டருடன் தாதிய உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் இணைந்து செயற்பட்டனர்.

இங்கு ஸஹ்றியன்ஸ் – 93/96 அணியினரின் அங்கத்தவர்கள், ஆண், பெண் இருபாலாரும் ஆர்வமாக கலந்து கொண்டு இரத்தத்தினை வழங்கினர்.

இங்கு கருத்து தெரிவித்த ஸஹ்றியன்ஸ் – 93/96 அமைப்பின் அங்கத்தவரும் டாக்டருமான எம்.எச்.றிஸ் பின்,
மக்கள் சிறந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் சகல நோய்கள் தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் அனைவரும் அடிக்கடி வைத்தியர்களை அனுகி பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் இந்த பரிசோதனை நடந்துவதற்கு அனுமதியளித்த சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர். சனூஸ் காரியப்பர் அவர்களுக்கு அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

55 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

67 0 0