மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவடிக்கை..!
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் இன்றைய தினம் காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் விசேட சிரமதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இச் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடற்தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
சிரமதானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நாளையதினம் மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம்பெறவுள்ளது.




