உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு விசேட பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான எ.சி கஜநாயக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட தகுதியுள்ள கைதிகளுக்கே இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாவது,
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சிறையில் கழித்த ஒவ்வொரு வருடத்திற்கும் தலா ஒரு வாரம் வீதம் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு இந்த பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், 75 ஆயிரம் ரூபாவிற்கும் குறைவான தண்டப்பணத்தை செலுத்த முடியாமல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் எஞ்சிய தண்டனைக் காலமும் இதன் கீழ் இரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு குறித்த 49 கைதிகளும் நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

67 0 0