உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

காலி – ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காலி, கராந்துவ பகுதியை சேர்ந்த அச்சிர சனேஸ் சமரசேகர என்ற இளைஞன் ஆவார்.

தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில்,
“எனக்கு நான்கு பிள்ளைகள். உயிரிழந்தது எனது கடைசி மகன். கடந்த 29 ஆம் திகதி அவரது 20 ஆவது பிறந்தநாள். அதனை கொண்டாடுவதற்காக நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கு மகன் உறவினர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

அதைப் பிடிக்கச் சென்ற மகன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.

ஆனால் எனது மகனை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மகன் உயிரிழந்த இடத்திலேயே மறுநாள் அவரது சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

58 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

54 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

99 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

67 0 0