உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்ட விழிப்புணர்வு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

சமூக வலைதளங்கள் மற்றும் ஏனைய வழிகள் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர், ஆள் கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளில் சிக்குவது அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஆள் கடத்தலுக்கு எதிரான சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அந்தப் பணியகம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்ட வேலைத்திட்டம் அண்மையில் அனுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் உள்ளூர் அளவில் சட்டத்தை அமுல்படுத்தும் குழுவினரான பொலிஸ் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு வழங்குவதன் மூலம், மக்களுக்கு மிகவும் துல்லியமான மற்றும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என பணியகம் எதிர்பார்க்கிறது.

தற்போது அதிகளவிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அவர்கள் மோசடியாளர்களிடம் சிக்குவதைத் தடுப்பதும், மோசடியாளர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துவதுமே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0