உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மத ரீதியிலான பிரிவினையை தவிர்க்க சச்சிதானந்தம் சிவசேனுக்கு முன்னாள் அமைச்சர் சுகிர்தன் எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

உங்களுடைய முகவர்களை திருப்திப்படுத்துவதற்காக மதங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் சுவாமியை எச்சரித்துள்ளார்இது தொடர்பாக இன்று (2) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

வடமராட்சி கிழக்கில் அதிகளவான இந்து கோயில்களுக்கு அதிகளவான நிதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஒதுக்கி உள்ளார்நான் ஏன் இதை கூறுகிறேன் என்று சொன்னால் எங்களுடைய இனத்தை பொறுத்த வரைக்கும் இனத்தின் ஒற்றுமை என்பது மதம் சாதி ரீதியாக பிரிந்து இருக்காமல் ஒற்றுமையாக தமிழர்கள் என்ற எண்ணத்திலேயே நாங்கள் வாழ வேண்டும்.

அவ்வாறு ஒற்றுமையாக இருந்து எங்களுடைய விடுதலையை வலியுறுத்துகின்ற போது தான் எங்களுடைய இன விடுதலைக்கான சாத்தியப்பாடுகள் அதிகளவாக இருக்கின்றது.இந்த இடத்தில் சிவசேன அமைப்பினுடைய தலைவர் சச்சிதானந்தம் ஐயாவிற்கு ஒரு தகவலை கூற விரும்புகிறேன்

உங்களுடைய முகவர்களை திருப்தி படுத்துவதற்காக எங்களுடைய மக்களை, அல்லது எங்களுடைய தலைவர்களை மதரீதியாகவோ ,சாதிரீதியாகவோ பிரித்து கருத்துக்களை கூறுவதை நிறுத்த வேண்டும்எங்களைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் தமிழர்கள் அது மட்டும் தான் எங்களுடைய பார்வையில் இருக்கின்றது நாங்கள் சாதி ரீதியாகவோ மதம் ரீதியாகவோ வேறுபடவில்லை.

நாங்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றலாம் ஆனால் நாங்கள் தமிழர்கள்.அந்த சிந்தனையுடன்தான் தமிழரசு கட்சி இத்தனை காலமும் பயணித்துக் கொண்டிருக்கிறது

ஆகவே யாராக இருந்தாலும் இனி வரும் காலங்களில் தமிழ் அரசுக் கட்சியை நோக்கி வேறு ஏதாவது கூறுங்கள் விமர்சியுங்கள் ஆனால் மத ரீதியாகவோ சாதிரீதியாகவோ விமர்சித்து தமிழ் அரசுக் கட்சியை முற்றாக அழிக்கலாம் என்று கனவு காண வேண்டாம்

பொய்யான கருத்துக்களை கூறுவதை சிவசேன அமைப்பின் தலைவர் நிறுத்த வேண்டும். மக்களை குழப்பும் முயற்சியில் ஈடுபடக் கூடாதுநீங்கள் சைவ சமயத்தினுடைய சிவசேனத் தலைவராக இருப்பதையிட்டு நாங்கள் மகிழ்கிறோம்.நீங்கள் சைவ சமயத்தை பாதுகாப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம்.

அதற்காக நீங்கள் மதரீதியாக எங்களுடைய மக்களை பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் பல சைவக் கோயில்களுக்கான வழக்குகளை சுமந்திரன் பேசுகின்றார்

திருக்கேதீஸ்வர வழக்கு சைவ மதத்தவர் மற்றும் கிறிஸ்தவ மதத்தவர்களுடைய வழக்காக பார்க்கப்படுகிறது. மன்னார் ஆயர் உட்பட இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த போதும் திரு சுமந்திரன் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக சைவ சமயத்திற்கு ஆதரவாக இந்த வழக்கை பேசிக் கொண்டிருக்கிறார்

ஆகவே மதரீதியான கருத்துக்களை கூறி மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்தும் சிவசேன தலைவர் உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன் கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0