உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யுத்தத்தின் பின்னர் யாழ். இலங்கை வங்கியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பிரிவு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

40 வருடங்களின் பின்னர் மீண்டும் இலங்கை வங்கி யாழ்ப்பாண தலைமையில் கிளையில் சர்வதேச பிரிவானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தமது சேவைகளை இலகுவாகவும், விரைவாகவும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரிவானது யுத்தத்திற்கு முன்னர் இயங்கி வந்த நிலையில் யுத்த காலத்தில் இடை நிறுத்தப்பட்டது.இவ்வாறான பின்னணியில் இன்று மீண்டும் அந்த பிரிவானது, வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.4 தசாப்தங்களாக தலைமை காரியாலயத்தில் பெறக் கூடியதாக இருந்த சர்வதேச பிரிவின், சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிதிசார் சேவைகளை இன்றுமுதல் யாழ். கிளையில் மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டது.பின்னர் சர்வதேச பிரிவானது நாடா வெட்டி வைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை வங்கியின் யாழ். தலைமை காரியாலய முகாமையாளர் நே.சுஜாத்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் வடக்கு மாகாண உதவி முகாமையாளர் வீ.சிவானந்தன் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை வங்கியின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

போட்டிக்குச் செலுத்தப்படும் அரச, தனியார் பேருந்துகள் : பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை அரச போக்கு வரத்து சேவையின் பேருந்து இன்றைய தினம் தனியார் பயணிகள் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் கா.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் வடமராட்சி கிழக்கு…

55 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் “கோப் சிற்றி” வைபவ ரீதியாக திறந்து வைப்பு

மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கோப் சிற்றி வைபவ ரீதியாக திறந்து வைப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-08-2026)மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

98 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

66 0 0