யாழில் வயிற்றோட்டம் காரணமாக சிறுவன் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றின் காரணமாக 11 வயது சிறுவன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோண்டாவில் – இருபாலை வீதியைச் சேர்ந்த மகிந்தன் லர்மிகன் (வயது 11) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சிறுவனுக்கு நேற்றைய தினம் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று பிற்பகல் சுமார் 5.00 மணியளவில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார்.
வயிற்றோட்டத்தினால் உடலில் கடும் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு, அதன் விளைவாக ஏற்பட்ட கிருமித் தொற்றினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.இதனையடுத்து, குறித்த சிறுவனின் சடலம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.