உள்ளூர் சந்தையில் இஞ்சி விலை சடுதியாக உயர்வு.!
உள்ளூர் சந்தையில் இஞ்சி விலை திடீரென அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.வழக்கமாக ஒரு கிலோ கிராம் இஞ்சி ரூபா 300 முதல் 500 வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ கிராம் இஞ்சி ரூபா 1,500 முதல் 2,000 வரையான உயர்ந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
டிட்வா புயலின் தாக்கத்தால் இஞ்சி பயிர்கள் பெருமளவில் சேதமடைந்ததன் காரணமாக, இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.