பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.!
கொட்டகலை கிரீன் ஹில் ரிட்ரிட் சென்டர் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் வண.பிதா மெரின்ஸ், கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் கிரீன் ஹில் ரிட்ரிட் சென்டர் தலைவர், முகாமையாளர், கிராம உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
சுமார் 1000 மாணவர்கள் கற்றல் உபகரணங்களைப் பெற்றுக் கொண்டார்கள்.
