உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
39 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டித்வா தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வினை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது. டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்குள் மாகாண சபைத் தேர்தலையும் உள்ளடக்குங்கள். அப்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

96 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

64 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

58 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

59 0 0