சட்டவிரோத மதுபான உற்பத்தி; இருவர் கைது.!
மினுவாங்கொடை – ஒபாத பகுதியில் நேற்று சனிக்கிழமை (31) சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொட்டுகொடை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 1,755 லீற்றர் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, சிலாபம் – மடவத்த பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (31) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது.
சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.