உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கொ*லைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தெஹிவளை மற்றும் கொஹுவளை ஆகிய பகுதிகளில், நடந்த இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அவர்கள் 18 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் கல்கிஸ்ஸை பகுதிகளை சேர்ந்தவர்கள்

மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவினரால் குறித்த சந்தேகநபர்கள் தெஹிவளை – தும்ரிபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 09ஆம் திகதி தெஹிவளை பகுதியிலுள்ள ஹோட்டலின் உரிமையாளரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் கடந்த டிசம்பர் 12ஆம் திகதி கொஹுவலை – போதியவத்த பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை என்பவற்றிற்கு உடந்தையாக இருந்து உதவிய இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 14 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரால் தூண்டப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0