உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; 24 நபர்களின் சட்டத்தரணிகள் விலகல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
34 பார்வைகள்

2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான ‘டிரயல்-அட்-பார்’ (மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்) விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 24 நபர்களின் சட்டத்தரணிகளும், இந்த வழக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் முற்பகல் 9:30 முதல் மாலை 4:30 வரை விசாரணை மிக வேகமாக நடைபெறுகிறது. இதனால் மற்ற வழக்குகளில் முன்னிலையாகவோ அல்லது இந்த வழக்கிற்குத் தேவையான தயாரிப்புகளைச் செய்யவோ தங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், விசாரணை வேகமாக நடப்பதால், தமது வாடிக்கையாளரை சந்தித்து விரிவான ஆலோசனைகளைப் பெறுவதிலும் முறையான வாக்குமூலங்களைப் பதிவு செய்வதிலும் பெரும் சிக்கல் இருப்பதாக சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக, விசாரணையை வாரம் 5 நாட்களுக்குப் பதிலாக 3 நாட்கள் மட்டும் நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததே சட்டத்தரணிகளின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகும்.

இந்த வழக்கில் 24 பேருக்கு எதிராக மொத்தம் 23,269 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை மட்டும் சுமார் 23,000 பக்கங்களைக் கொண்டது.

சுமார் 2,190 சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் ரோஹன் குணரத்ன ஆகியோர் முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.

வழக்கில் 76 வாள்கள், வெடிமருந்துகள் உட்பட 184 ஆதாரப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டத்தரணிகள் விலகுவதாக அறிவித்தமையை தொடர்ந்து, நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மூன்று விருப்பங்களை வழங்கியுள்ளது.

புதிய சட்டத்தரணிகளை தாங்களே நியமித்துக் கொள்வது. நீதிமன்றமே வழங்கும் அரசு சட்டத்தரணியை ஏற்றுக்கொள்வது. வழக்கைத் தாங்களாகவே வாதாடுவது என்ற மூன்று யோசனைகளே நீதிமன்றின் விருப்பமாகும்.

இந்தநிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களது முடிவை நாளையதினம் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0