கஞ்சாவுடன் ஒருவர் கைது.!
1,240 மில்லிகிராம் கஞ்சாவுடன் சிவனடிபாத மலைக்கு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் மவுஸ்சாகலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள மஸ்கெலியா பொலிஸார் மேற்கொள்ளும் வீதி தடை சோதனை சாவடியில் வைத்து கொடக்காவல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரிடம் இருந்து 1240 மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கஞ்சா கொண்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் நேற்று 30 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட போது 7500 ரூபாய் அபராதம் விதித்து நீதிவான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.