உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
28 பார்வைகள்

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கன்னிப் பயணத்திற்காக A-330 எயார்பஸ் ரக விமானம் பயன்படுத்தப்பட்டது. இதில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் பயணித்திருந்தனர்.இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, பாரம்பரிய முறைப்படி நீர்த்தாரை மரியாதை வழங்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டது.

இனிவரும் காலங்களில், இந்த விமான சேவை வாரத்திற்கு இருமுறை செவ்வாய் மற்றும் சனி கட்டுநாயக்க வருகை பிற்பகல் 02.20 மணிக்கும், மீளப் புறப்படும் நேரம் பிற்பகல் 04.20 மணிக்கும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

93 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0