உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அநுர அரசின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை! குறி வைக்கப்படும் வெளிநாட்டிலுள்ள குற்றவாளிகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் கொலை, கப்பம் கோருதல், போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் பாரிய தாக்குதல் குற்றங்களுடன் தொடர்புடைய 95 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதாக சமகால அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள இந்த 95 சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் சிவப்பு அறிவித்தல் மூலம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.2025 ஆம் ஆண்டில் சர்வதேச பொலிஸார் மற்றும் அந்தந்த நாட்டு பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச பொலிஸ் வலைப்பின்னல் ஊடாகத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

91 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0