திருகோணமலையில் சற்று முன்னர் நிலநடுக்கம்.!
திருகோணமலை நகரம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். இன்று மாலை 04 மணியளவில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.