உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டம் தொடர்பான பிரேரணையில் வலி.கிழக்கு பிரதேச சபையில் வாக்குவாதம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

வலி.கிழக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போது, கிவுல் ஓயா திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணையின்போது சபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அரசாங்கத்தினால் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிங்கள குடியேற்றத் திட்டமான கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் அனுமதிக்காக முன்வைத்தார்.


இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதம் இடம்பெற்றது.அரசாங்கத்தினால் அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிங்கள குடியேற்றத் திட்டமான கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சபையின் அனுமதிக்காக முன்வைத்தார்.
இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் வாக்குவாதம் இடம்பெற்றது.


மகாவலி திட்டம், வெலி ஓயா திட்டம் போன்றே, திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக தவிசாளர் சபையில் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, குறித்த திட்டத்திற்கு எதிரான பிரேரணை சபையின் முன் வைக்கப்பட்டது.

இதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 9 பிரதேச சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.அதேவேளை, ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறித்த திட்டம் தமிழ் மக்களுக்கு விரோதமானது எனக் கூறி, பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

91 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

63 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

57 0 0