உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கரையோர தொடருந்து சேவைகள் குறித்து வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு இடையில், இரண்டு தினங்கள் தொடருந்து சேவைகள் தாமதமாகக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று (31.01.2026) மற்றும் நாளை (01.02.2026) தொடருந்து சேவைகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் வெள்ளவத்தை தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான மேல் மற்றும் கீழ் மார்க்கங்களில் இயக்கப்படும் தொடருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சமிக்ஞை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகள் காரணமாக இந்தத் தாமதம் ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் சுமார் 15 நிமிடங்கள் வரை தாமதமாகக்கூடும் என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக தொடருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தொடருந்து திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

84 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

62 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0