இன பிரச்சினைக்கு: சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வேண்டும் – ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்து.!
தேசிய இனப்பிரச்சினைகள் சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என ஐக்கிய சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதனை தொடர்பாக, கட்சி எதிர்வரும் 13ஆம் திகதி யாழ். நல்லூரில் விசேட கூட்டம் நடத்தவுள்ளது.
கட்சித் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய, சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தவுள்ளார்.மேலும், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் மற்றும் வடக்கு மீன சமூகத்தின் பிரச்சினைகள் உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இதன்போது கட்சி வலியுறுத்துகிறது.