திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம்!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை உடனடியாக அகற்றுமாறு, மேலும் திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரியும் போராட்டம் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை திஸ்ஸ விகாரைக்கு அருகே நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மற்றும் நாளை (பௌர்ணமி நாள்) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை போராட்டம் நடைபெறும்.இந்த போராட்டத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.