உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் கொ*லை: விசாரணைகள் தீவிரம்.! – இளங்குமரன் எம்.பி. தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அரசின் மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இதனையடுத்து, இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், எமது அரசாங்கம் எந்தவிதத் தளர்வும் இன்றி விசாரணை நடத்தி, நீதி நிலைநாட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0