ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டுக்கு முன்னர் ரணில் – சஜித் நேரில் சந்திப்பு – அரசியல் நகர்வுகளில் முக்கிய திருப்பம்.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாக உறுதியாகியுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உருவாகி எதிர்வரும் 10ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அதற்கு முன்னதாக இருவரும் நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சந்திப்பில் எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் அறிய முடிகின்றது.
இரு அரசியல் அணிகளும் இணைவுக்குத் தயாராக இருப்பதாகக் கூறப்பட்டாலும், அது தனிக்கட்சியாக அமையுமா அல்லது கூட்டணியாக அமையுமா என்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.அதனால், ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ இடையிலான இந்தச் சந்திப்பே அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும் என, கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.