உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கிவுல் ஓயா திட்டம் திட்டமிட்ட இன அழிப்பின் தொடர்ச்சி – லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
26 பார்வைகள்

சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா திட்டமானது, தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது என தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மகாவலி அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள திட்ட அறிக்கையின் படி, கிவுல் ஓயா நீர்த்தேக்கம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக கிராமங்களுக்கு அண்மையில் அமைக்கப்படவுள்ள ஒரு மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும்.

அந்தத் திட்ட அறிக்கையில், குறித்த நீர்த்தேக்கத்தின் பயனாளிகளாக மூவாயிரத்து இருநூற்று மூன்று சிங்களக் குடும்பங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காஞ்சூரமோட்டை உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் கிராமங்களின் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.


மேலும், 47 தொல்லியல் பிரதேசங்களும் கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தின் கீழ் மூழ்கிப்போகும் நிலை இருப்பதாக, மகாவலி அதிகார சபையின் திட்ட அறிக்கையின் ஊடாக தெரியவருகின்றது.
இந்த உண்மைத் தகவல்கள் அனைத்தையும் மூடிமறைத்துக் கொண்டு, தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பொய்யானவை என கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் கூறியமைக்கு, தமிழர் மரபுரிமைப் பேரவை கடும் கண்டனத்தை வெளியிடுகிறது.


வடக்கில் மக்களை அரவணைப்பது போன்று நடித்து, பின்னால் இருந்து தாக்கும் அரசியல் நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன எனவும், அவை மிகுந்த கவலைக்குரியவை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


இலங்கைத் தீவில் நிலையான அபிவிருத்தி, சமாதானம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் நிலைபெற வேண்டுமாயின், இவ்வாறான திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு எதிராக தமிழ் மக்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்பும் இன்றி தொடர்ந்து போராடுவார்கள் எனவும், அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

82 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0