உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலையில் யானை அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விசனம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
29 பார்வைகள்

திருகோணமலை – வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்ன மோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், இன்று(30.01.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக உப்பூறல் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பயன் தரும் தென்னைமரங்களையும், ஆறுக்கும் மேற்பட்ட வீடுகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன், வீட்டிலிருக்கும் வீட்டு உபகரணங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகளால் சேதமாக்கப்பட்ட வீடுகளுக்கு இதுவரையும் அரசாங்கத்தினால் நஷ்டஈடுகள் கூட வழங்கப்படவில்லை.

எனவே, நிரந்தர தீர்வாக யானை வேலிகள் அமைக்கப்படவேண்டும், மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்தில் வாழ்கின்றனர். பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த விடயத்தில் உடன் கவனம் எடுத்து நிரந்தர தீர்வைப் பெற்று கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0