உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலை வைத்தியசாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் பிக்குகள் : சர்ச்சையை கிளப்பும் சிவில் அமைப்புகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து தேரர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு சிலர் உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடலோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு திருகோணமலை விகாரை தொடர்பில் கோரிக்கை ஒன்றை கையளிக்க இன்று (30.01.2026) வந்திருந்த சிங்கள பௌத்த சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்திருந்தனர். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைப்பினர்,சிறையில் இருக்கும் பிக்குகளுக்கு உணவு வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மறுக்கின்றனர். வைத்தியசாலையில் பிக்குகள் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளனர். ஏன் இப்படி செய்கிறீர்கள்.

யாரை சந்தோசப்படுத்துகிறீர்கள். திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் கடற்கரையில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு இடத்தில் கரையை அண்மித்த பகுதியில் கோவில் கட்டப்பட்டுள்ளது.ஏன் கரையோர திணைக்களத்திற்கு இதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாதா? திருகோணமலையில் ஒரு மக்கள் பிரிவினருக்கு ஒரு நியாயமும் எமக்கு வேறு விதமான நீதியும் நிலைநாட்டப்படுகிறது.

இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படுகிறது. நாட்டின் ஜனாதிபதிக்கே அதிகாரம் இருக்கிறது. அவர் தனக்கு கீழ் இருக்கும் ஒரு திணைக்களத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நாட்டை எப்படி நடத்துவார்? என குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0