உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

திருகோணமலை வலயக் கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேற்குறித்த பாடசாலையில் கடமையாற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30.01.2026) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வரும் குறித்த ஆசிரியரது முயற்சியால் தமது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றதாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்தநிலையிலே, அவ்வாறானதொரு ஆசிரியரை இடமாற்றம் செய்வது அந்தப் பகுதி மாணவர்களது கல்வி எதிர்காலத்தினை பாதிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் தமக்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை எனவும், பிறிதொரு நியமனத்தின் ஊடாக ஆசிரியர் தமது பாடசாலைக்கு நியமிக்கப்பட கால தாமதம் ஏற்படுவதனால் மாணவர்களது கல்வியானது கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு விடுவித்த காணாமல் போனோர் பற்றிய தகவல்களைத் தாருங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை

அரசு விடுவித்த காணாமல் ஆட்கள் பற்றிய தகவல்களைத் தாருங்கள். அது தான் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு அரசு செய்கின்ற நியாயமான செயலாக…

81 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக 2 ஆயிரம் மெட்ரிக் தொன் அளவிலான நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்…

61 0 0
இலங்கை செய்திகள்

அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியால் மக்கள் பேரவலம் – சஜித் குற்றச்சாட்டு

அரசின் தொலைநோக்கற்றஆட்சியால் மக்கள் பேரவலம் தற்போதைய அரசின் தொலைநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் மக்கள் பாரிய அவதிக்குள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். பொய்கள் மற்றும்…

56 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

56 0 0